மேலும் செய்திகள்
காங்கேயம் அருகே வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
28-Apr-2025
காங்கேயம், முத்துார், காங்கேயம் ரோடு, ரங்கபையன்காட்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணன், 50; நேற்று காலை, 10:30 மணிக்கு கோவிலுக்கு சென்றவர், 12:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த, 5 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி முத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன் இதே பகுதியில் சுகாதார ஆய்வாளர் வீட்டில், ஐந்து பவுன் நகை திருட்டு போனது. அதில் குற்றவாளிகள் சிக்காத நிலையில், தொழிலாளி வீட்டில் நடந்த திருட்டு, அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
28-Apr-2025