பவானி அருகே அனுமதி பெறாத 5 சாயப்பட்டறை இடித்து அகற்றம்
பவானி,பவானி அருகே ஆண்டிகுளம் பஞ்., காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சில சாயப்பட்டறைகள், இரவு நேரங்களில் பவானி ஆற்றில் கழிவுநீரை திறந்து விடுவதாக புகார் சென்றது. இதன் அடிப்படையில் ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பத்துக்கு மேற்பட்ட சாயப்பட்டறைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.இதில் அனுமதியின்றி செயல்பட்ட ஐந்து சாயப்பட்டறைகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று இடித்து தரைமட்டமாக்கினர்.அதேசமயம் அனுமதி பெற்று இயங்கும் ஒரு சாயப்பட்டறையில் இருந்து, இரவில் பவானி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டது தெரிந்ததால், அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.