உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 48 கொள்முதல் நிலையங்களில் 52,697 டன் நெல் கொள்முதல்

48 கொள்முதல் நிலையங்களில் 52,697 டன் நெல் கொள்முதல்

ஈரோடு: ஈரோட்டில் வேளாண் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.கூட்ட விவாதம் வருமாறு:தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அகற்றிவிட்டு, தனியார் மூலம் நெல் கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழகம் திட்டமிடுவதை கைவிட வேண்டும். காளிங்கராயன் பாசனப்பகுதியில் அறுவடை துவங்குவதால், ஏப்., 1ல் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள்: அறுவடை துவங்கினால், ஏப்., 1 முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தயாராக உள்ளோம். நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு வழங்குவது பற்றி அறிவிப்பு ஏதுமில்லை. கீழ்பவானி பாசனப்பகுதியில் செயல்படும், 48 நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம், 52,697 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கலெக்டர்: தெருநாய் கடித்து இறந்த கால்நடைகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அரசாணை வந்ததும், இழப்பீடு வழங்கப்படும். கால்நடை இறப்பை வருவாய் துறை, கால்நடை துறையினர் மூலம் குறிப்பிட்டவாறு பதிவு செய்து, போஸ்ட்மார்டம் அறிக்கை உட்பட சில ஆவணங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும். எனவே கால்நடையை இழந்தவர்கள், உரிய ஆவணங்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ