உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாஸ்மாக் விடுமுறையில் மது விற்ற 6 பேர் கைது; 192 பாட்டில் பறிமுதல்

டாஸ்மாக் விடுமுறையில் மது விற்ற 6 பேர் கைது; 192 பாட்டில் பறிமுதல்

ஈரோடு: டாஸ்மாக் கடை விடுமுறை தினமான நேற்று முன்தினம், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே, ஈரோடு மதுவிலக்கு போலீசார் சோதனைில் ஈடுபட்டனர். அப்போது, 29 மதுபாட்டில் வைத்திருந்த, ஸ்டோனி பிரிட்ஜ் பகுதி சிவக்குமாரை, 51, கைது செய்தனர். இதேபோல் கருங்கல்பாளையம், ராஜாஜிபுரத்தில், 13 மதுபாட்டில்களுடன், பழனியம்மாள், 70; வீரப்பன்சத்திரம் தெப்பகுளம் வீதியில், ஒன்பது மதுபாட்டில்களுடன் பழனிகுமார், 42; கனிராவுத்தர் குளம் பகுதியில், 27 மதுபாட்டில் வைத்திருந்த பெரியசேமூர் தினேஷ், 30, மற்றும் 100 பாட்டில் வைத்திருந்த சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த சரவணன், 35; முத்தம்பாளையத்தில், 14 மதுபாட்டில் வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 52, ஆகியோரை மது விலக்கு போலீசார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி