மேலும் செய்திகள்
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
08-Aug-2025
சென்னிமலை, சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர், காமராஜ் நகரை சேர்ந்தவர் ரத்னசுந்தர், 71; இவரின் மகன் திலீப் ராஜ்குமார், 36; அரச்சலுார் கார் கம்பெனி சர்வீஸ் மேனேஜர். இவரது மனைவி தேவி, 32; தந்தை ரத்னசுந்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை உடனிருந்து மகன், மருமகள், 20 நாட்களாக கவனித்து வருகின்றனர். இதை நோட்டமிட்ட ஆசாமிகள், நேற்று முன்தினம் இரவு வீட்டில் புகுந்துள்ளனர். பீரேவில் வைத்திருந்த, ௬ பவுன் தங்க நகை, 7,௦௦௦ ரூபாயை திருடி சென்றுள்ளார். நேற்று காலை திலீப்ராஜ்குமார் வீட்டுக்கு சென்றபோது திருட்டு நடந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி சென்னிமலை போலீசார் வழக்குப்பதிந்து, களவாணிகளை தேடி வருகின்றனர்.
08-Aug-2025