சென்னிமலை, சென்னிமலை யூனியன் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி, ராசாபாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது பட்டிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்து தெருநாய்கள் கடித்ததில் ஒரு ஆடு பலியானது. இரு ஆடுகள் படுகாயம் அடைந்தனர்.
அதே பகுதியில் கந்தசாமி பட்டியில் ஒரு ஆடு, ராமசாமிக்கு சொந்தமான மூன்று ஆடு, மஞ்சித் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆட்டை, தெருநாய்கள் கடித்து கொன்றுள்ளன. சில ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. தெருநாய்கள் மீண்டும் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடிக்க தொடங்கியிருப்பது, விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.