மேலும் செய்திகள்
பெயின்டர் விபரீத முடிவு
03-Oct-2025
ஈரோடு, ஈரோடு முனிசிபல் காலனியில், தமிழ்நாடு கூட்டுறவு சொசைட்டி இயங்கி வருகிறது. இங்கு உதவி மேலாளராக, 15 ஆண்டாக ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதி ரமேஷ்குமார், 45, பணியாற்றி வருகிறார். உறுப்பினர்கள் அடமானம் வைக்கும் தங்க நகைகளை கையாடல் செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதை தொடர்ந்து ஆய்வு நடந்ததில், 60 பவுன் வரை கையாடல் செய்தது தெரிந்தது. இதுகுறித்து சொசைட்டி இயக்குனர் ஜெயந்தி, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகி விட்ட ரமேஷ்குமாரை தேடி வருகின்றனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
03-Oct-2025