மேலும் செய்திகள்
கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் சிக்கினர்
11-May-2025
கோபி, கோபி அருகே, கோவிலுக்கு வந்தவர்களை மலைத்தேனீக்கள் கொட்டியதில், ஏழு பேர் காயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே காசிபாளையத்தில் உள்ள சுங்கத்து கருப்பராயன் கோவிலுக்கு, நேற்று காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் சிலர் சுவாமியை தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில், கருங்கற்களை கொண்டு அடுப்பாக்கி, அதில் பொங்கல் வைக்க பற்ற வைத்தனர். அந்த சமயத்தில், பறந்து வந்த மலைத்தேனீக்கள், கோவில் வளாகத்தில் நின்றிருந்த அவர்களை கொட்டியதால், அங்கிருந்த தார்பாய்க்குள் புகுந்தனர்.பின், கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மலைத்தேனீக்களை விரட்டியடித்து, தார்பாய்க்குள் தஞ்சமடைந்திருந்த ஏழு பேரை மீட்டனர். அவர்களில், சத்தியமங்கலத்தை சேர்ந்த அமுல்ராஜ், 60, காந்தி, 60, நஞ்சப்பன், 50, வாணிப்புத்துார் மாதேஸ்வரி, 45, ஞானசேகரன், 36, கடம்பூரை சேர்ந்த கமலா, 45, பள்ளத்துரை சேர்ந்த சுரேஷ் மகன் வர்சன், 8, ஆகிய ஏழு பேரையும், கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில், நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
11-May-2025