8ம் தேதி உள்ளூர் விடுமுறை
8ம் தேதி உள்ளூர் விடுமுறைஈரோடு:சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு தீ மிதி விழா வரும், 8ம் தேதி நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடுக்கப்படுகிறது. இதை ஈடு செய்யும் வகையில், ஏப்.,26ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.