உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1 லட்சம் மதிப்புள்ள 8 டன் காய்கறி இலவசம்

ரூ.1 லட்சம் மதிப்புள்ள 8 டன் காய்கறி இலவசம்

ரூ.1 லட்சம் மதிப்புள்ள8 டன் காய்கறி இலவசம்புன்செய்புளியம்பட்டி, நவ. 16-கேரளா மாநிலம் வைக்கம், மகாதேவ சுவாமி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதற்கு உதவும் வகையில், புன்செய்புளியம்பட்டி பண்ணாரியம்மன் அன்னதானக்குழு சார்பில் தக்காளி, முட்டைக்கோஸ், கத்தரி, வெண்டை, பீன்ஸ், முள்ளங்கி, உருளை, பூசணி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய் உள்பட, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 8 டன் காய்கறி வகை லாரியில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை