பஸ் நிறுத்தத்தில் இருபாலர் கழிப்பறை நிறைவேறியது 20 ஆண்டு கோரிக்கை
காங்கேயம்: காங்கேயம் அருகே நத்தக்காடையூரில் பஸ் நிறுத்தத்தை, 53 குக்-கிராம மக்கள், பழையக்கோட்டை ஊராட்சியில், 48 குக்கிராம மக்கள், மருதுறை ஊராட்சியில், 11 கிராம மக்கள் என, 112 குக்-கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் கழி-வறை இல்லாததால் அனைத்து தரப்பினரும் அவதிக்கு ஆளா-கினர். ஊராட்சி சார்பில் பஸ் நிறுத்த பகுதியில் கழிவறை கட்டித்-தருமாறு, ௨௦ ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நி-லையில் நத்தக்காடையூர் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் ஏற்-பாட்டில், ஊராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை இடத்தில், தமி-ழக அரசின், 15வது நிதிக்குழு திட்டத்தில், 7.40 லட்சம் ரூபாய் நிதியில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா மூன்று கழிப்பறை என ஆறு கழிப்பறை கட்டப்பட்டது. மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. ௧௧௨ குக்கிராம மக்களின், 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு மக்கள் நன்றி தெரி-வித்தனர்.