ஓடும் வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த மாடு
ஓடும் வாகனத்தில் இருந்துசாலையில் விழுந்த மாடுஈரோடு, நவ. 22-ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டு சந்தை நேற்று நடந்தது. சந்தையில் மூன்று மாடுகளை விலைக்கு வாங்கிய ஒருவர், சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றார். சிறிது துாரமே சென்ற நிலையில் ஒரு மாடு வாகனத்தில் இருந்து விழுந்தது. வாகனத்தில் கயிறு கட்டி இருந்ததால் சிறிது துாரம் சாலையில் இழுத்து செல்லப்பட்டது. இதைப்பார்த்து மக்கள் சத்தமிடவே டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். பிறகு வேறு ஒரு ஆட்டோவில் அந்த மாட்டை ஏற்றி சென்றனர். வாகனத்தில் இடநெருக்கடியாக இருந்ததால், மாடு தவறி விழுந்துள்ளது.