உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தி-கரட்டூர் இணைப்பு சாலையில் பலி வாங்க காத்திருக்கும் அபாய குழி

சத்தி-கரட்டூர் இணைப்பு சாலையில் பலி வாங்க காத்திருக்கும் அபாய குழி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் கரட்டூர் செல்லும் இணைப்பு சாலையில், தார்ச்சாலை நடுவில் சாக்கடை குழாய் செல்கிறது. இந்த வழியாகதான் கோவை, அத்தாணி, பவானி, பண்ணாரி, மைசூரு பஸ்கள் சென்று பஸ் ஸ்டாண்டை அடைகின்றன. சரக்கு வாகனங்களும், அதிக எண்ணிக்கையில் பயணிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் இந்த இடத்தில் சிறு குழி ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல செல்ல குழியின் அளவு பெரிதாகியபடி இருந்தது. தற்போது சாக்கடைக்கான கான்கிரீட் கம்பி பெயர்ந்து வெளியே நீட்டிக்கொண்டுள்ளது. வாகனங்களின் டயர்களில் கம்பி சிக்கினால் டயர் வெடித்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. இரவில் டூவீலர்களில் செல்வோரும் சிறிது கவனம் பிசகினாலும், விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை