உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழைய பிளாஸ்டிக் பொருள் சேகரிக்கும் வியாபாரி பலி

பழைய பிளாஸ்டிக் பொருள் சேகரிக்கும் வியாபாரி பலி

காங்கேயம்: திருப்பூர், வண்சிவரம்புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 50; திருப்பூரில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கடை வியாபாரம் செய்தார். இதற்காக பல ஊர்களுக்கு சென்று பழைய பொருட்-களை வாங்கி வருவது வழக்கம். இந்த வகையில் காங்கேயம்--கரூர் ரோடு முத்துார் பிரிவு அருகே சொந்தமான எக்ஸ்.எல்., மொபட்டில் நேற்று காலை சென்றார். அப்போது கோவையில் இருந்து கரூர் செல்லும் அரசு பஸ் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. காங்கேயம் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி