உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்டாகிராமில் பழகிய தோழியிடம் தாலிக்கொடி பறித்து தப்பிய தோழன்

இன்ஸ்டாகிராமில் பழகிய தோழியிடம் தாலிக்கொடி பறித்து தப்பிய தோழன்

பவானி, பவானி லட்சுமி நகர் மேட்டுநாசுவன்பாளையம், ஈ.பி.,காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி பவித்ரா, 28; நேற்று அதிகாலை இவர் வீட்டுக்கு வந்த இருவர் கதவை தட்டியுள்ளனர். பவித்ரா கதவை திறக்க, கத்தி முனையில் அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தாலிக்கொடியை பறித்து தப்பினர். அதிர்ச்சி அடைந்தவர் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், நீல நிற சுவிப்ட் டிசையர் காரில் கொள்ளையர்கள் வந்தது தெரிந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து செக்போஸ்டுகளையும் உஷார்படுத்தினர். ஆசாமிகள் வந்த காரை, லட்சுமி நகரிலேயே போலீசார் பிடித்தனர். காரில் இருவர் இருந்தனர். இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ., காலனி டில்லிராஜ், 33, அவருடைய நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த ராஜகுமாரன், 27, என்பது தெரிந்தது. காரை பறிமுதல் செய்து, கைது செய்தனர். பவித்ராவுடன் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்த டில்லிராஜ், தனது நண்பரை அழைத்துக்கொண்டு பார்க்க வந்துள்ளார். அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். நகையை மீட்ட போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ