மனைவியின் துரோகத்தால் மனமுடைந்த கணவன் மாயம்
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் கோவில் அருகே, குமணன் வீதியை சேர்ந்தவர் மனோகரன், 54; இவர் மனைவி இரு மாதங்களுக்கு முன் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் மனோகரன் மன வேதனையில் இருந்தார். இதனால் கருங்கல்பாளையத்தில் உள்ள அண்ணன் மகன் சுந்தரசேகர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த, 5ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. சுந்தரசேகர் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.