உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட குடுகுடுப்பைக்காரர் கைது

கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட குடுகுடுப்பைக்காரர் கைது

வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே தீத்தாம்பாளை-யத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 170 மாணவ-மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை, 11:00 மணி அளவில் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவன், சிவநாதபுரம் செல்வ-குமார் மகன் கவுசிக், 8, பள்ளி வளாகத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மூலனுார், மணலுாரை சேர்ந்த குடுகுடுப்-பாக்காரர் ராசு, 40, மாணவன் கவுசிக்கை பள்ளியை விட்டு வெளியே தீத்தாம்பாளையம் பஸ் நிறுத்தம் நோக்கி அழைத்து சென்றார். இதைப்பார்த்த மக்கள் சுதாரித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரித்து கடத்தல் முயற்சி வழக்குப்பதிந்து, ராசுவை கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜப்படுத்தி, கோவை சிறையில் அடைக்கப்படனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி