மேலும் செய்திகள்
பவானியில் 33 மி.மீ., மழை
12-Jul-2025
சென்னிமலை, சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சியில், செங்குளம் மற்றும் சிப்காட் பகுதி களில் நேற்று அதிகாலை, 3:௦௦ மணி முதல் 5:௦௦ மணி வரை பலத்த மழை கொட்டியது.இதனால் சிப்காட் ஆறாவது கிராஸ் ரோடு பகுதியில் செயல்படும் தனியார் ஆலையில் இருந்து வெளியேறிய தண்ணீர், செங்குளம் ஊர் குடியிருப்பு வழியாக வந்தது. இதனால் நான்கு ஏக்கர் பரப்பிலான செங்குளம் குளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னும் அதிக மழை பெய்து இதுபோல் நீர் ஊருக்குள் புகுந்தால் பல வீடுகள் நீரில் மிதக்கும். எனவே சிப்காட் கம்பெனி பகுதியில் இருந்து வரும் தண்ணீர் செங்குளம் ஊருக்குள் வராமல் தடுப்பு அமைத்து மாற்றி விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பவானிசாகரில் 40 மி.மீ., மழை ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பவானிசாகரில், 40.20 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-2.40, மொடக்குறிச்சி-1, பெருந்துறை-4, சென்னிமலை-4.60, அம்மாபேட்டை-2, வரட்டுபள்ளம் அணை-12.40, கோபி-17.40, எலந்தகுட்டைமேடு-1.60, கொடிவேரி அணை-11.40, குண்டேரிபள்ளம் அணை-21.60, சத்தி-38.30.அதிகாலையில் மழைபவானி அருகே சேர்வராயன் பாளையம், சின்னமோள பாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, விஜயகாலனி, ஆப்பக்கூடல், ஓசைபட்டி, கரட்டுப்பாளையம், புதுப்பாளையம், பெருந்தலையூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை, 4:00 மணி முதல் 5:30 மணி வரை மழை பெய்தது.
12-Jul-2025