உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் ஒரே இரவில் 3 வீடுகளில் தொடர் திருட்டு

அந்தியூரில் ஒரே இரவில் 3 வீடுகளில் தொடர் திருட்டு

அந்தியூரில் ஒரே இரவில்3 வீடுகளில் தொடர் திருட்டுஅந்தியூர், அக். 25-அந்தியூர், சீப்பர்ஸ் காலனியை சேர்ந்தவர்கள், தனபால், 53; குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர். நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவை திறந்து, ௪,௦௦௦ ரூபாயை திருடினர். பக்கத்து வீட்டில் செங்கோட்டையன், 44, வசிக்கிறார். குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்ததால் வீடு பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்றவர்கள், வெள்ளி அரைஞாண் கயிறை திருடியுள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மதிவாணன், 62, வசிக்கிறார். உடல்நிலை சரியின்றி கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது வீட்டின் கேட் கதவை உடைத்து, ஹோண்டா சைன் டூவீலரை திருடி சென்றனர்.நேற்று காலை விடிந்த பிறகே மூன்று வீடுகளில் திருட்டு நடந்தது தெரிய வந்தது. அந்தியூர் போலீசார் அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் மதிவாணன் வீட்டில், கண்காணிப்பு கேமரா இருந்தது. அதை ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்த மூன்று பேர் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. களவாணிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !