தீவிரமாக தேடும் தனிப்படை
பவானி, ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்த தம்பதி, சித்தோடு அருகே கோணவாய்க்கால் பகுதியில், துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதே பகுதியில் குழந்தையுடன் தங்கியுள்ளனர். இவர்களின் இரண்டு வயது பெண் குழந்தை, நேற்று முன்தினம் அதிகாலை காணாமல் போனது. புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் கொசுவலையை கத்தியால் அqறுத்துவிட்டு, குழந்தையை கடத்திக்கொண்டு, காரில் செல்வது தெரிய வந்துள்ளது. ஆசாமியை பிடிக்க சித்தோடு மற்றும் பவானி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.