டூவீலரில் சென்ற இளம்பெண் பஸ் அடியில் சிக்கி விபத்து
ஈரோடு, கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், நேற்று மதியம் 1:00 மணியளவில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் செல்வதற்காக, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் உள்ள வாசுகி வீதியில் திரும்ப முயன்றது. அப்போது, அதே திசையில் பஸ்சின் இடது பக்கத்தில் டூவீலரில் சென்ற இளம் பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக, பஸ்சின் முன் சக்கரத்தில் டூவீலருடன் சிக்கி கொண்டார்.அப்போது, பஸ் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்ததால், உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், அந்த பெண்ணுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் திரண்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. இதனால் கால் மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அரசு மருத்துவமைனை போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.