உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் ஆதார் சேவை மையம் வாரம் முழுதும் செயல்பட அமைப்பு

ஈரோட்டில் ஆதார் சேவை மையம் வாரம் முழுதும் செயல்பட அமைப்பு

ஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே, நல்லி மருத்துவமனை சாலையில், ஆதார் சேவை மையம் நேற்று துவங்கியது. கலெக்டர் கந்தசாமி, மைய செயல்பாடுகளை துவக்கி வைத்தார். மைய உதவி மேலாளர் தியாகராஜன், நிர்வாக மேலாளர் கணேசன் கூறியதாவது:ஆதார் தொடர்பான சேவைகளை மக்கள் எளிதில் பெற தமிழகத்தில் இதுவரை, 9 மாவட்டங்களில் ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் துவங்கப்பட்டுள்ளது.ஆதார் சேவையில் சில முக்கிய பிரச்னைகளுக்கு பெங்களுருவில் உள்ள தலைமை அலுவலகம் சென்று, திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இனி அங்கு செல்லாமல், இதுபோன்ற சேவை மையங்களில் உரிய கட்டணம் செலுத்தி எளிதில் பெறலாம்.இங்கு பொது விடுமுறை நாட்கள் தவிர, வாரத்தின் ஏழு நாட்களும் காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படும். இங்கு புதிய ஆதார் அட்டை பெறுதல், பெயர், விலாசம், மொபைல் எண்களில் மாற்றம் மற்றும் திருத்தம் செய்தல், பயோமெட்ரிக் பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெறலாம். இங்கு தினமும், 150 முதல், 200 பேர் வரை பதிவு மற்றும் திருத்தம் மேற்கொள்ளலாம். பயனாளிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்தும், தங்களுக்கு ஏற்ற நேரத்தை தேர்வு செய்து, மையத்துக்கு வந்தும் சேவை பெறலாம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ