உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் வழிபாடு

அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் வழிபாடு

தர்மபுரி, ஆடிப்பூரத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் வளையல் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார்.தர்மபுரி அருகே, பாரதிபுரத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி, சிறப்பு அபிஷேக பூஜை நேற்று நடந்தது. தொடர்ந்து, 10,008 வளையல் அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். அதேபோல், தர்மபுரி டவுன் கடைவீதி, அம்பிகா பரமேஸ்வரி அம்மன், 15,008 வலையல்கள் அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோட்டை வரமஹாலஷ்மி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில், ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஆடிப்பூர சிறப்பு பூஜையில் பங்கேற்ற பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், தாலி சரடு ஆகியவை படைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ