உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் மீது குற்றச்சாட்டு

கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் மீது குற்றச்சாட்டு

ஈரோடு:ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி, ஈரோடு கலெக்டர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது:கொடிவேரி அணை பாசன பகுதியான தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனப்பகுதியில், நெல் அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, கொள்முதல் நிலையங்கள் (டி.பி.சி.,) செயல்படுகிறது.நஞ்சை புரியம்பட்டியில் உள்ள அரசின் நெல் கொள்முதல் நிலையத்துக்கு, வீலர்களில் வந்த ஈரோடு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை கட்சியை சேர்ந்த சிலர், நிதி கேட்டு பில் கிளர்க்கை மிரட்டியுள்ளனர். 'இது அரசு நிறுவனம் என்றும், நிதி வழங்க இயலாது' என கூறியுள்ளனர். இதையறிந்து சென்ற விவசாயிகள், எங்கள் சங்க நிர்வாகிகள் வீடியோ பதிவு செய்ததால் அங்கிருந்து சென்று விட்டனர். இதுபோன்ற அடாவடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை