உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தினம்

திண்டல் வேளாளர் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர் தினம்

ஈரோடு, ஏஈரோடு அருகேயுள்ள திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில், சாதனையாளர் தினம் நடந்தது. தலைமை விருந்தினராக, சென்னை வேக்கன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை சேர்ந்த மனிதவள பொது மேலாளர் -சரத்சந்தர் பங்கேற்று பேசினார். சமூக வட்டம் மற்றும் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். வடிவமைத்தல் மொழிகளின் முக்கியத்துவம், நோகோடு தளத்தின் சமீபத்திய போக்குகளை சுட்டிக்காட்டினார். டிஜிட்டல் மயமாக்கலில் உலகளாவிய வட்டத்தில் தீவிரமாக பங்கேற்கவும் ஊக்குவித்தார்.விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வள்ளுவன் வரவேற்புரை நிகழ்த்தினார். வேளாளர் கல்வி அறக்கட்டளையி செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஜெயராமன், கல்லுாரி ஆண்டறிக்கை வாசித்தார். அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா, டீன், நிர்வாக மேலாளர் பெரியசாமி, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி