உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபரை தாக்கிய பழங்குற்றவாளி கைது

வாலிபரை தாக்கிய பழங்குற்றவாளி கைது

வாலிபரை தாக்கியபழங்குற்றவாளி கைதுஈரோடு, அக். 9-சித்தோடு, கங்காபுரம், கொளத்துபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 32; கனகராஜ் என்பவரை பார்க்க, ஈரோடு வில்லரசம்பட்டி தொட்டம்பட்டி பகுதியில் நடந்து சென்றார்.அப்போது தொட்டம்பட்டி பூபதி மகன் சூர்யா, 22, பழனிச்சாமியை மறித்து தகாத வார்த்தை பேசியதுடன் கல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த பழனிச்சாமி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து, சூர்யாவை கைது செய்தனர். சூர்யா மீது வீரப்பன்சத்திரம் போலீசில் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தல், சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை