மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
10-Oct-2024
தாராபுரம்: தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, தாரா-புரம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சோதனையில் ஈடுபட்டபோது, காளிபாளையம் மேட்டுவலசில் முத்துக்குமார் வீட்டில் சூதாட்டம் நடந்ததை கண்டுபிடித்தனர். முத்துமா-ணிக்கம், 57, அஜ்மீர் ராஜா, 41, முகமது ஹக்கீம், 27, உள்பட எட்டு பேரை கைது செய்து, 17 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்-தனர். இதில் முகமது ஹக்கீம், அ.தி.மு.க., கிளை நிர்வாகி என தெரிகிறது. இதேபோல் தாராபுரம் லாரி மார்க்கெட்டில் நடந்த சூதாட்டத்தில், சரவணன், 51, சுப்பிரமணியம், 60, கர்ணன், 43, உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
10-Oct-2024