உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம், தாராபுரத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி

காங்கேயம், தாராபுரத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி

காங்கேயம், தாராபுரத்தில்அ.தி.மு.க., மனித சங்கிலிகாங்கேயம், அக். 9-சொத்துவரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில், காங்கேயம் நகராட்சி அலுவலகம் முன், மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளர் வெங்கு மணிமாறன் தலைமை வகித்தார். உயர்த்தப்பட்ட சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அருண்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் துரைசாமி உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன், அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலையில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. வழக்கறிஞர் ஆனந்தன், அவைத் தலைவர் குமார், பழனிசாமி உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன், நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை