உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை

தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை

காங்கேயம்: காங்கேயம் தாலுகா பகுதியில், தை பருவத்தில் சிறிய மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடிக்கு, விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தரமான விதை சரியான விலையில் விவசாயிக-ளுக்கு கிடைக்க, விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை நட-வடிக்கை மேற்கொண்டுள்ளது.எனவே விவசாயிகள், விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும்போது, விதைகள் தரமானதா என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும். உரிமம் பெறாத விதை, காலாவதி விதைகளை வாங்க கூடாது. விற்பனை ரசீது கட்டாயம் கேட்டு பெற வேண்டும். ரசீதில் விதைகளின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தகவலை ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை