உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.மா.கா., ஓட்டுச்சாவடிமுகவர்கள் ஆலோசனை

த.மா.கா., ஓட்டுச்சாவடிமுகவர்கள் ஆலோசனை

ஈரோடு:த.மா.கா., மாநகர் மாவட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திர சேகர், மாவட்ட விவசாய அணி தலைவர் சம்பத் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சொத்து பதிதல் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது, மண்டல வாரியாக, பகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கவும் ஏகமனதாக முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை