மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
14-Sep-2025
அந்தியூர், பிரசாரத்துக்கு அந்தியூர் வரும் அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்.,சுக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், அந்தியூரை அடுத்த நகலுாரில் நேற்று நடந்தது. அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நாராயணன் வரவேற்றார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செல்வ ராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமை வகித்து, ஆலோசனை வழங்கி பேசியதாவது:கோவை மாவட்டத்தில் பிரசாரத்தை துவங்கிய இ.பி.எஸ்., கோட்டையில் முதல்வராக அமர போகிறார். அதேசமயம் நாம் எதிரியை குறைத்து மதிப்பிடக்கூடாது. கடந்த தேர்தலில் எதிரியை குறைத்து மதிப்பிட்டதால்தான் தோற்று போனோம்.அந்தியூர் தொகுதிக்கு யாரை அறிவித்தாலும் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டியது உங்கள் கடமை. இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரமணீதரன், ராஜாகிருஷ்ணன், அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், அத்தாணி பேரூர் செயலாளர் திருமுருகன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் சிவக்குமார், அந்தியூர் மீனவரணி செயலாளர் விஸ்வநாதன் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
14-Sep-2025