உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அமராவதி புதைகுழி; நிரந்தர தீர்வுக்கு மனு

அமராவதி புதைகுழி; நிரந்தர தீர்வுக்கு மனு

தாராபுரம், தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜாவிடம், நேற்று மனு அளித்தனர். மனு விபரம்:தாராபுரம் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் புதை மணல் உள்ளது. இதுவரை இதில் சிக்கி, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அறிவிப்பு பலகை வைத்தாலும் சிதிலமடைகிறது.இத்தனை மரணங்கள் நிகழ்ந்த பிறகும், நிரந்தர நடவடிக்கை இல்லை. எத்தனை மரணங்கள் ஏற்பட்டாலும் மவுனமாகவே இருப்பது என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். புதை மணலை அகற்றி அதற்கு மாற்றாக கற்களை நிரப்புவது அல்லது கான்கிரீட் அமைப்பது போன்ற நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுகிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ