மேலும் செய்திகள்
இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் கட்சிகள்
08-Jun-2025
பவானிசாகர்: பவானிசாகர் பேரூராட்சி பகுதியில், மறுவாழ்வு முகாமில் வசிக்கும், 50 சதவீத இலங்கை தமிழர் வேறு முகாமுக்கு மாற்ற கோரியும், அவர்களுக்கு கூடுதலாக புதிய வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், அனைத்துக் கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில், பவானிசாகரில், ஜூன், 30ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம், சத்தி தாசில்தார் ஜமுனா ராணி தலைமையில், பவானிசாகர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அனைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் பங்கேற்றன. இலங்கை தமிழர் மறு-வாழ்வு முகாமில், கூடுதலாக வீடுகள் கட்டுவதற்கு எவ்வித திட்-டமும் இல்லை. முகாம் மக்களின் எண்ணிக்கையை குறைத்து, வேறு முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் உறுதியளித்தார். இதனால் கடையடைப்பு மற்றும் கருப்புக்கொடி முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கூறினர். அதேசமயம் மீண்டும் குடியிருப்பு கட்ட தொடங்கினால் போராட்டம் அறிவிக்கப்படும் என அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்பினர் தெரிவித்தனர்.
08-Jun-2025