உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அங்கன்வாடி மைய ஓய்வூதியர் பிரசாரம்

அங்கன்வாடி மைய ஓய்வூதியர் பிரசாரம்

தாராபுரம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பிரசார இயக்கத்தில் ஈடுபட்டனர். லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். முறையான ஓய்வூதியம் வழங்குவதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து பிரசாரம் செய்யப்பட்டது. மாநில செயலாளர் ரீட்டா பேசினார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் அம்புஜம், முத்தமிழ் ராஜ், மின்னல் கொடி மற்றும் சுசிலா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ