உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட பேரவை கூட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட பேரவை கூட்டம்

ஈரோடு, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் ராதாமணி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலர் சாந்தி வரவேற்றார். அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்.குடும்ப வரன்முறையுடன் கூடிய பென்ஷன் வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படிபணிக்கொடை ஊழியருக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளருக்கு, 5 லட்சம் ரூபாய் என வழங்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்துக்கு நிதிக்குறைப்பை தவிர்க்க வேண்டும். கடந்த, 1993ல் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் பூங்கொடி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை