மேலும் செய்திகள்
அண்ணாதுரை நினைவு நாள்; தி.மு.க., அமைதி ஊர்வலம்
04-Feb-2025
ஈரோடு: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தை முன்-னிட்டு, ஈரோட்டில் பெரியார் நகரில் உள்ள அமைச்சர் முத்துசாமி வீட்டிலும், மணல்மேட்டில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்-திலும் அண்ணாதுரை உருவப்படத்துக்கு அமைச்சர் தலைமையில் மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினர். இதேபோல் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட அலுவலகத்தில், அண்ணாதுரை உரு-வப்படத்துக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். * பவானியில், அந்தியூர்-மேட்டூர் பிரிவில், தி.மு.க., சார்பில், நகர செயலாளர் நாகராசன் தலைமையிலும், அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், அண்ணாதுரை போட்-டோவுக்கு மரியாதை செலுத்தினர்.* கோபி, புதுப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவல-கத்தில் எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில், அண்ணா-துரை உருவப்படத்துக்கு, கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதேபோல் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி தி.மு.க., சார்பில், பவானி செல்லியாண்டியம்மன் கோவில் மற்றும் சங்க-மேஸ்வரர் கோவில்; பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது.* பவானிசாகர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில், புன்செய்புளியம்பட்டி நகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணாதுரை உருவச்-சிலைக்கு, ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
04-Feb-2025