உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சோழீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேக விழா

சோழீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேக விழா

ஈரோடு, ஈரோடு காவிரிக்கரையில் சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தேவசேனாவுடன் கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள், கன்னிமூல கணபதி, கஜலட்சுமி மற்றும் சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. நேற்று கோவிலின் வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது. கணபதி பூஜையுடன் தொடங்கி, புன்னியாகம், பஞ்சாசனம், பஞ்சாபரணம் பூஜைகள் நடந்தது. பின், ஹோமம் யாகம், தர்ப்பார்த்தன யாகம், தத்துவ ஹோமம் போன்றவைகள் நடத்தி பூரணாதி செய்யபட்டது. பின், கலசத்திற்கு அனைத்து சக்திகளும் சென்றடையும் வகையில் பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி