உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.12.71 லட்சம் பெற்று மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

ரூ.12.71 லட்சம் பெற்று மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஈரோடு, ஈரோடு கதிரம்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார், 30. இவருக்கு டெலிகிராம் மூலம் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. அதில் ஒரு லிங்க்கை அனுப்பி, அதனை தொட்டால் பணம் கிடைக்கும் என ஆசை காட்டினர். லிங்க்கை தொடும் போது எல்லாம் சிறு தொகையை தொடர்ந்து அனுப்பினர். இதனை உண்மை என நம்பிய நந்தகுமார், கடந்தாண்டு நவம்பரில் ரூ.12 லட்சத்து 71 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.ஆனால் அதன் பின் பணம் வரவில்லை. டெலிகிராமிலும் எந்த தகவலும் வரவில்லை. பல நாட்களுக்கு பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து, தர்மபுரி மாவட்டம் குப்பூரை சேர்ந்த சண்முகம், 43, சுதாகர், 44, ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதில் தொடர்புடைய ஜிம் பொருட்கள் விற்பனையாளரான பாலாஜி, 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை