உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

ஈரோடு, நவ. 17-சிறுமி பலாத்கார வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 15 வயது சிறுமியை கூலி தொழிலாளியான நாமக்கல் மாவட்டம் வெப்படை பல்லக்காபாளையத்தை சேர்ந்த செந்தில் குமார், 43, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது மனைவி இந்திராணி, 30, உடந்தையாக இருந்துள்ளார். இந்திராணியின் ஆண் நண்பர்களான நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சோழசிராமணியை சேர்ந்த ரமேஷ், 44, வினோத்குமார், அரவிந்த், சுதாகர் ஆகியோரும் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கும் இந்திராணி உடந்தையாக இருந்துள்ளார்.செந்தில் குமார், இந்திராணி, ரமேஷ், வினோத்குமார் ஆகிய நால்வரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுதாகரன் என்ற வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்த வைராபாளையம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த பாலு மகன் சுதாகரனை, 27, மகளிர் போலீசார் கைது செய்தனர். பின், நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ