உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தவித்த மலைகிராம மக்களை சந்தித்த அந்தியூர் எம்.எல்.ஏ.,

தவித்த மலைகிராம மக்களை சந்தித்த அந்தியூர் எம்.எல்.ஏ.,

அந்தியூர்,பர்கூர்மலையில் ஐந்து நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மலை கிராமங்களான குட்டையூர், வேலம்பட்டி, மட்டிமரத்தள்ளி பகுதிக்கு அடியோடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இப்பகுதி கிராம மக்கள் உணவுக்கு கூட வழியின்றி தவிக்கின்றனர்.இந்நிலையில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், குட்டையூர் கிராமத்துக்கு நேற்று சென்றார். வெள்ளம் பாய்ந்தோடும் பாலாற்றை பார்வையிட்டார். தற்போது இடுப்பளவு தண்ணீர் செல்லும் நிலையில், ஒருவர் கையை ஒருவர் பற்றியவாறு ஆற்றைக்கடந்து வந்த சிலர், எம்.எல்.ஏ.,வை சந்தித்து பேசினர். அவர்களின் நிலைமையை கேட்டறிந்தவர், குட்டையூர், வேலம்பட்டிக்கு செல்லும் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுபற்றி கர்நாடக மாநிலம் அன்னுார் எம்.எல்.ஏ., மற்றம் மாவட்ட நிர்வாகத்திடமும் பேசி, அடுத்த மாதமே பாலம் கட்ட பணி துவங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனிடையே பாலாற்றில் சிறிது தண்ணீர் வற்றிய நிலையில், நேற்று மறுகரையை கடந்து சென்ற மக்கள், தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை