உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த மூலனுார், முளையாம்பூண்டி பகுதியில், 4 கி.மீ., துாரத்துக்கு காற்றாலை பயன்பாட்டுக்கான மின் கம்பங்கள் அமைக்கப்படவுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முளையாம்பூண்டி, கருக்கம்பாளையம் புதுார், பட்டத்திபாளையம், வடக்குவலசு பகுதியை சேர்ந்த மக்கள், தாராபுரம் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: காற்றாலை பயன்பாட்டுக்காக செய்யப்படும் பணியால், 5 கிராமங்களில் குடிநீர் குழாய், மின்கம்பங்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவே மாற்று வழியில் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை