ரேஷன் ஊழியர் ஸ்டிரைக் பா.ஜ., சார்பில் முறையீடு
காங்கேயம், ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், கடைகளில் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்று ஊழியர்களை வைத்து, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய, பா.ஜ., தரப்பில் காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், தெற்கு மாவட்ட பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு தலைவர் இளங்கோ அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த நான்கு நாட்களாக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், காங்கேயம் வட்டத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகள் திறக்க வேண்டும். அப்படி இல்லையேல் மாற்று ஊழியர்களை வைத்து பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.