உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுடுகாட்டின் வகையை மாற்றக்கோரி முறையீடு

சுடுகாட்டின் வகையை மாற்றக்கோரி முறையீடு

ஈரோடு, கோபி, நல்லகவுண்டன்பாளையம் சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல் தலைவர் ேஷக் இஸ்மாயில் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:நல்லகவுண்டன்பாளையத்தில் முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் மயானம், ஈரோடு - சத்தி சாலையை ஒட்டி உள்ளது. சாலை விரிவாக்கத்துக்காக சுற்றுச்சுவரை இடித்தனர். மீண்டும் சுவரை கட்டிக்கொள்ள, 2.66 லட்சம் ரூபாய் ஜமாஅத் தலைவருக்கு நெடுஞ்சாலை துறை வழங்கியது. ஆனால், சுற்றுச்சுவர் கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால், இவ்விடத்தை முஸ்லிம் மயானம் என மாற்றம் செய்ய வேண்டும்.தாமதம் ஏற்பட்டால் வரும், 27ல் கோபி பகுதிக்கு வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, கறுப்பு கொடி காட்டுவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ