மயானத்துக்கு பாதை வசதி கலெக்டரிடம் முறையீடு
ஈரோடு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலர் ஜெயகுமார் தலைமையில், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:பவானி தாலுகா ஒரிச்சேரி பஞ்., ஒரிச்சேரி புதுார், பாரதி நகர் அருந்ததியர் மக்களின் மயானத்துக்கு செல்லும் பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்து அடைத்து விட்டனர். பல்வேறு போராட்டத்துக்கு பின், தனி மயான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கான பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். புன்னம் பஞ்., வேலாமரத்துாரில், அருந்ததியர் மக்கள் பயன்படுத்தும் மயான இடம், 3 ஏக்கருக்கு மேல் உள்ளது. அங்கும் ஆக்கிரமிப்பை அகற்றி, பாதை ஏற்படுத்தி தர வேண்டும். ஆப்பக்கூடல் டவுன் பஞ்., கரட்டுப்பாளையத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. எதிர்கால தேவைக்கு, 25 சென்ட் நிலம் ஒதுக்கினர்.தற்போது டவுன் பஞ்., நிர்வாகம் அந்நிலத்தில் குடிநீர் தொட்டி கட்ட அடிப்படை பணி செய்கின்றனர். அவ்வாறு செயல்படுத்தக்கூடாது.இவ்வாறு கூறினர்.