தற்காலிக பட்டாசு உரிமம் 18க்குள் விண்ணப்பியுங்கள்
ஈரோடு,:தீபாவளிக்கான பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்புவோர், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். பட்டாசு உரிமம் கோரும் இடத்தில் புல வரைபடம், கிரைய பத்திரம், முகவரிக்கான ஆதாரம் - ஆதார் அல்லது ரேஷன் கார்டு, சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, பாஸ்போர்ட் அளவு போட்டோ, 0070-60-103ஏஏ-22799 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக, 600 ரூபாய் செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன் வரும், 18 வரை விண்ணப்பிக்கலாம்.