நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகள் நன்றி
ஈரோடு:தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, கவுன்சிலர் பதவி மசோதா நிறைவேற்றி நியமன அடிப்படையில் செயல்படுத்த அறிவித்த முதல்வருக்கு, ஈரோடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜரத்தினம் நன்றி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: இந்த மசோதாவால் நுாற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் குரல் உள்ளாட்சிகளில் ஒலிக்கும். இதன் மூலம் தாங்கள் வசிக்கும் சொந்த ஊரில் மரியாதை உயரும். முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.