உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8 சட்டசபை தொகுதிக்கு தி.மு.க., சார்பில் பார்வையாளர் நியமனம்

8 சட்டசபை தொகுதிக்கு தி.மு.க., சார்பில் பார்வையாளர் நியமனம்

8 சட்டசபை தொகுதிக்கு தி.மு.க.,சார்பில் பார்வையாளர் நியமனம்ஈரோடு, அக். 10-ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளிலும் நடக்க உள்ள தேர்தல் பணிகளை பார்வையிட, தி.மு.க., சார்பில் பார்வையாளர்களை நியமித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், வாக்காளரை சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தொகுதி பார்வையாளர்களை முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் நியமித்துள்ளார். இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி பார்வையாளராக தி.மு.க., மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன், ஈரோடு மேற்கு தொகுதி - மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயகுமார், மொடக்குறிச்சி தொகுதி - திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், பெருந்துறை தொகுதி - தி.மு.க., மாநில தகவல் தொழில் நுட்ப இணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுபோல, பவானி தொகுதி - மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், அந்தியூர் தொகுதி - மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் காசி, கோபி தொகுதி - சட்டத்துறை இணை செயலாளர் தண்டபாணி, பவானிசாகர் தொகுதி - மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை