ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு
ஈரோடு, ஈரோடு வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் ௨ பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் இளங்கோ, முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். இதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் ௧ பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கும் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி செயலாளர் சிவானந்தன், தாளாளர் கணேசன், தலைமையாசிரியை கவிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.