உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 13,660 பேர் டெட் தேர்வெழுத ஏற்பாடு

13,660 பேர் டெட் தேர்வெழுத ஏற்பாடு

ஈரோடு, தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை (டெட்) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் இரண்டு நாள் நடைபெற உள்ளது. வரும், 15ல் முதல் தாள், 16ல் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. முதல் தாள் தேர்வு ஈரோடு மாவட்டத்தில், 13 மையங்களில், 66 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 3,279 பேர் எழுதவுள்ளனர். 16ல் நடக்கும் இரண்டாம் தாள் தேர்வு, 38 மையங்களில், 117 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 10,381 பேர் எழுத உள்ளனர். மொத்தம் இரு தேர்வையும், 41 மையங்களில், 13,660 பேர் எழுத உள்ளனர். இதற்கான வினாத்தாள் ஈரோடு ப.செ.பார்க்கில் உள்ள அரசு மேல்நிலைபள்ளி கட்டுகாப்பு மையத்துக்கு நேற்று வந்து சேர்ந்தது. பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. சிசிடிவி கேமரா மூலம் அறை கண்காணிக்கப்படுகிறது.போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்டுகாப்பு மையத்தை முதன்மை கல்வி அலுவலர் மான்விழி ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !