உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைலில் லாட்டரிவிற்போர் கைது தீவிரம்

மொபைலில் லாட்டரிவிற்போர் கைது தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, மொபைல்போனில் லாட்டரி விற்போரை, போலீசார் கைது செய்வது அதிகரித்துள்ளது. இந்த வகையில் பெருந்துறை அருகே திருவேங்கிடம் பாளையத்தில், தண்ணீர்பந்தல் வீதியை சேர்ந்த மோகனசுந்தரம், 42, கேரளா லாட்டரி சீட்டை, மொபைல்போனில் விற்றது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது, 65 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.* புன்செய்புளியம்பட்டி போலீசார் நேற்று, நம்பியூர் சாலை பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர்.அப்போது மொபைல்போனில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற, புன்செய்புளியம்பட்டி, அன்பழகன் வீதி ரியாஸ், 35, அமீர்ஜான், 37, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இரு செல்போன், 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.* டி.என்.பாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் காந்தி வீதியில் கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த வரதராஜன், 63, என்பவரை, பங்களாப்புதுார் போலீசார் கைது செய்தனர். நிருபர் குழு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை